கள்ளியொன்றின் நிழல்போதுமெனக்கு
ஒரு நாள் முழுக்க ஆடுமேய்த்துவிடுவேன்
கனவுகளில் புதைவேன்
முள்வலி மறப்பேன்
கதைக் கேட்டு நானுமொரு
கதை சொல்வேன்
காதலை எழுதி வைப்பேன்
வாளியொன்றை மாட்டிவிட்டு
சட்டையை சுருட்டி சொருகி வைப்பேன்
ஆட்டின் முலையழுத்தி பசி மறப்பேன்
பாட்டன் சொத்து முசுமுசுங்கை
கிளித் தின்ற கோவைக்கனி
பறித்து கொண்டுசெல்வேன்
அதிலேயே கொடியறுப்பேன்
விறகு சுமக்கும் என் மக்களுக்கு
இத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னும்
அதிலிருக்கும் கூடொன்றை
துறக்காமல்
வந்து போய்க்கொண்டுதானிருக்கின்றன
குருவிகள்.
ஒரு நாள் முழுக்க ஆடுமேய்த்துவிடுவேன்
கனவுகளில் புதைவேன்
முள்வலி மறப்பேன்
கதைக் கேட்டு நானுமொரு
கதை சொல்வேன்
காதலை எழுதி வைப்பேன்
வாளியொன்றை மாட்டிவிட்டு
சட்டையை சுருட்டி சொருகி வைப்பேன்
ஆட்டின் முலையழுத்தி பசி மறப்பேன்
பாட்டன் சொத்து முசுமுசுங்கை
கிளித் தின்ற கோவைக்கனி
பறித்து கொண்டுசெல்வேன்
அதிலேயே கொடியறுப்பேன்
விறகு சுமக்கும் என் மக்களுக்கு
இத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னும்
அதிலிருக்கும் கூடொன்றை
துறக்காமல்
வந்து போய்க்கொண்டுதானிருக்கின்றன
குருவிகள்.